முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம்

பிரிக்ஸ் (BRICS) அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் இன்றும் (22.10.2024) நாளையும் நடைபெறுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா (India), சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் மாநாடு

இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம் | Pm Modi To Attend Brics 2024 Summit In Russia

பிரதமர் மோடி ரஷ்யா பயணம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், புட்டின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்று 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உருவான பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.

எனது கசான் பயணம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா கூட்டாண்மை

இதேவேளை, உலகளாவிய வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களை மக்களுடன் இணைப்பது போன்றவற்றில் கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக உருவான பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம் | Pm Modi To Attend Brics 2024 Summit In Russia

கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையால் நிகழ்ந்த பிரிக்ஸ் விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நன்மைக்கான உரையாடல்களை, திட்டங்கள் வகுத்தலை ஊக்குவித்துள்ளது.

எனது கசான் பயணம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி காயம்

இந்நிலையில், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக பிரேசில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.