முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தபால் நிலையத்திற்குள் நுழைந்த நாயால் சிரமத்திற்குள்ளான மக்கள்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் ஒன்று உள்நுழைந்த நிலையில் அங்கு சேவைகளை
பெறுவதற்கு சென்றிருந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இருப்பினும், குறித்த கட்டாக்காலி நாயை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அங்குள்ள ஊழியர்கள் முன்வரவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

தெருநாய் கடி மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில்
யாழ்ப்பாணத்தில் பதிவாகி இருந்தன. இருப்பினும், உரிய தரப்புகள் இந்த விடயம் தொடர்பில் அக்கறை
செலுத்துவதை அவதானிக்க முடியவில்லை.

விபத்து சம்பவங்கள் 

மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் வீதிகளில் பயணம் செய்யும்போது போது
கட்டாக்காலி நாய்கள் அவர்களை துரத்திச் செல்லவும், கடிக்கவும் செய்கின்றன.

யாழில் தபால் நிலையத்திற்குள் நுழைந்த நாயால் சிரமத்திற்குள்ளான மக்கள் | Streeet Dog Issue In Jaffna Post Office

அல்லது வாகனங்களுக்கு குறுக்கே வந்தே விழுவதாலும், வீதியில் செல்பவர்களை
துரத்தி செல்லும் போதும் அவர்கள் அச்சத்தினால் வாகனங்களை செலுத்தும்
நிதானத்தை இழந்து விபத்துக்கள் கூட சம்பவித்த வண்ணம் உள்ளன.

கோப்பாய், நீர்வேலி ஆகிய பகுதிகளில் வீதிகளில் நாய்கள் குறுக்கே ஓடியதால் கடந்த
மூன்று நாட்களில் மூன்று பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறிமுறை 

அதேவேளை, நேற்றைய தினம், பருத்தித்துறை வீதி, கோப்பாய்
பூதர்மடத்துக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நாய் குறுக்கே
ஓடியதால் நிலைதடுமாறி நாயுடன் மோதி கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யாழில் தபால் நிலையத்திற்குள் நுழைந்த நாயால் சிரமத்திற்குள்ளான மக்கள் | Streeet Dog Issue In Jaffna Post Office

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்த கட்டாக்காலி நாய்களை பிடிப்பதற்கு
ஒரு பொறிமுறை காணப்பட்டது. இதனால் அந்த காலப்பகுதியில் வீதிகளில் கட்டாக்காலி
நாய்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

இருப்பினும், அந்த பொறிமுறை தற்போது நடைமுறைபடுத்தப்படாத காரணத்தினால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கட்டாக்காலி நாய்களை
குறைக்கும் அல்லது இல்லாது செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, வீதிகளில்
செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக
காணப்படுகின்றது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.