முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி
ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய இளைஞன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு
தொலைபேசி ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய புதுக்குடியிருப்பு
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியினை கைவேலி பகுதியினை சேர்ந்த குறித்த இளைஞன் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவைத்திய பரிசோதனை
இதற்கமைய 22.10.2024 குறித்த சிறுமி அழைத்துவரப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு
உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமியினை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய கைவேலி பிரதேச இளைஞனை கைதுசெய்து
விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.