இலங்கை சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான 637 வாகனங்கள் ஓட்டுவதற்கு தகுதியற்றவை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுங்கத்திணைக்களம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 435 வாகனங்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட மட்டக்குளி காணியிலும், ஏனைய 202 வாகனங்கள் ருஹுணுபுர துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் அந்நிய செலாவணி
நாட்டின் அந்நிய செலாவணி செலவில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களின் கையிருப்பு நீண்ட காலமாக, பாவனையின்றி , நியாயமான தொகையை சம்பாதிக்க முடியாமல் போயுள்ளமையும் கணக்காய்வு அறி்க்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, அவற்றில் பல வாகனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுங்கக் கணக்காய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.