Courtesy: H A Roshan
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழழை கணிதப்புலமை சாதனை விருதை தி/ கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் வென்றுள்ளார்.
குறித்த சாதனை தி/ கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று (29.10.2024) நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனேவே, அவர் பத்தின் நூறாவது அடுக்குவரை மூன்று நிமிடங்களில் செய்த சாதனையினை இரண்டு நிமிடம் முப்பத்தொன்பது செக்கனில் நிறைவுசெய்து மீண்டும் தனது அடையாளத்தினையும் சோழன் உலக சாதனை புத்தக விருதினையும் தனதாக்கியுள்ளார்.
வாழ்த்து
உலக சாதனை படைத்த சிறுவனுக்கும் அவரது திறமையைக் கண்டறிந்து உலகறியச் செய்த இவரது பெற்றோருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.