முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாசார விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்
திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னாரில் மாவட்ட கலாசார விழா நடைபெற்றுள்ளது.

மாவட்டச் செயலகமும், கலாசார பேரவையும்
இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா நேற்று(29.10.2024) இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

கலை நிகழ்வுகள்

குறித்த நிகழ்வில் பிரதம
விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி
மேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மாந்தை
மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ், நானாட்டான் பிரதேசச் செயலாளர்
கே.சிவசம்பு, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் லாகினி நிருபராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

மன்னாரில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாசார விழா | Cultural Festival In Mannar

மேலும், கௌரவ விருந்தினர்களாக ஆங்கிலத்துறை பேராசிரியர்
ஜெயசீலன் ஞானராஜ், பொருளியல் பேராசிரியர் நேவில் மொறாயஸ்,தாவரவியல்
பேராசிரியர் சந்திரகாந்தா மகேந்திர நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் மாலை
அணிவிக்கப்பட்டு பண்பாட்டு பேரணியுடன் மன்னார் நகர சபை மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து களிகம்பு, கூத்து வழி நடனம், கிராமிய
நடனம், வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் பிரதேசச்
செயலாளர் பிரிவுகள் ஊடாக அரங்கேற்றப்பட்டதோடு, கலைஞர்களும் விருந்தினர்களினால்
கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.