ஊடகவியலாளர்களான செல்வகுமார் நிலாந்தன் மற்றும் தரிந்து ஜெயவர்தன ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை காவல்துறையினர் கைவிட்டு அவர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு(CPJ) இன்று(30) வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு
மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதும் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பாக அறிக்கையளித்தமை மற்றும் அவதூறு செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய ஜனாதிபதியுடன், பத்திரிகை சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது என CPJயின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெஹ் லிஹ் யி(Beh Lih Yi) தெரிவித்துள்ளார்.