யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த வீதியானது இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளது.
மக்கள் பாவனை
இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.