முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்சி சின்ன தெரிவு குறித்து மஹேல ஜெயவர்த்தனவின் பகிரங்க கருத்து

எதிர்காலத்தில் நானும் எனது நண்பர்களும் போல்கார்ட் (ballguard) சின்னத்தின் கீழேயே தேர்தலில் போட்டியிட வேண்டியிருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன (Mahela Jayawardane) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

“நீங்கள் அனைவரும் எந்த கட்சி என யோசிக்கின்றீர்கள், நானும் எனது நண்பர்கள் சிலரும் இதனை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என விரும்பினோம், நாங்கள் கட்சியொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்துவோம் என நினைத்தோம்.

அரசியல் கனவு

ஆனால், கட்சிக்கான பெயர்களை தேடியபோது எல்லா பெயர்களிலும் ஏனையவர்கள் பதிவு செய்திருந்தனர்.

கட்சி சின்ன தெரிவு குறித்து மஹேல ஜெயவர்த்தனவின் பகிரங்க கருத்து | Mahela Talked Funny About Political Party Symbols

அதன் பின்னர் கட்சியின் சின்னத்துடன் ஆரம்பிப்போம் என தீர்மானித்து கிரிக்கெட் மட்டையை தெரிவு செய்யமுயன்றவேளை அதனை பலவருடங்களிற்கு முன்னரே சின்னமாக சிலர் எடுத்துவிட்டனர், கிரிக்கெட் பந்தையும் எடுத்துவிட்டனர்.

நாங்கள் தேடிப்பார்த்தவேளை அவர்களிற்கும், அந்த கட்சிகளிற்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த தொடர்புமில்லை என்பது புலனாகியது.

எனது நண்பர் ஒருவர் தெரிவித்தது போல இருந்த ஒரேயொரு சின்னம் போல்கார்ட்தான்.

இதன் காரணமாக எங்கள் அரசியல் கனவுகள் கலைந்தன“ என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்