நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் உள்ள 30 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (02) பிற்பகல் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, யட்டிநுவர கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹலியகொட, எலபாத்த, குருவிட, கஹவத்த, கொடகவெல, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் இரண்டாம் கட்டத்தின் கீழ் ‘அவதானமாக இருக்குமாறு’ கேட்டுக்கொண்டுள்ளதுwe
பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
மேலும், பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல மற்றும் யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் அக்குரஸ்ஸ, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, அயகம, பலாங்கொட, இம்புல்பே, ஓபநாயக்க, கிரியெல்ல மற்றும் கலவானை ஆகிய பிரிவுகளில் உள்ளளோர் முதல் கட்டத்தின் கீழ் ‘விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் நாளை (03) மாலை 5.00 மணி வரை செல்லுபடியாகும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.