அறுகம்குடா (Arugambay) சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, மற்றுமொரு சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கல்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் விளங்குகிறது.
குறித்த பாசக்குடா கடற்கரைக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
அத்துடன், விடுமுறை தினங்கள் மற்றும் போயா தினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களின் போதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பாசிக்குடா கடற்கரை திடலில் 24 மணித்தியாலமும் காவல்துறையினர், கடற்கரையினர் மற்றும் சுற்றுலா காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை, இஸ்ரேலிய குடிமக்கள், தென்னிலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை உடனடியாக விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.