முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விசாரணைக்கு அழைப்பு : பிள்ளையானிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சனல் 4 காணொளி வெளியீடு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதமானது இன்று (12) சிவநேசதுரை சந்திரகாந்தனால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு (Election Commission of Sri Lanka) அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சனல் 4 காணொளி வெளியீடு

பிரித்தானிய சனலுக்கு ஆசாத் மௌலானா (Azad Maulana )வழங்கிய அறிக்கைகளைக் குறிப்பிட்டு, பொது பாதுகாப்பு அமைச்சில் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைப்பு : பிள்ளையானிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம் | Channel 4 Video Easter Attacks Pillayan Letter

ஆவணப்படத்தின் கூற்றுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றையதினம் (12) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஊடகப் பேச்சாளர் 

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) உறுதிப்படுத்தியிருந்தார்.

விசாரணைக்கு அழைப்பு : பிள்ளையானிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம் | Channel 4 Video Easter Attacks Pillayan Letter

இந்தநிலையில், இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்கிளத்திற்கு தன்னால் சமூகளிக்க முடியாமை தொடர்பிலும் அதற்கான காரணம் குறித்தும் மேற்படி கடிதம் சிவநேசதுரை சந்திரகாந்தனால் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்