முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுக வளாகத்தில் பெரிய புதைகுழிகள் – விசாரணைக்கு கோரிக்கை

கொழும்பு (Colombo) துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய புதைகுழிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணி கோரியுள்ளது.

இந்த கோரிக்கையானது மக்கள் போராட்ட முன்னணியின் செயலாளரால் கடிதம் மூலம் நீதி அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி நுவன் போபகே, இந்தக் கண்டுபிடிப்புகள் இலங்கையின் நீண்டகால காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் அரச வன்முறைகளின் கருமை நிறைந்த வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவதாக கூறினார்.

காணாமல் போன ஜே.வி.பி

1971, 1988–89 கிளர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் போனதாகவும், வட மாகாணத்தில் மட்டும் 12,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் பெரிய புதைகுழிகள் - விசாரணைக்கு கோரிக்கை | Massive Mass Graves At Colombo Port City

கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் அடையாளம், அவர்கள் எந்த சூழ்நிலையில் உயிரிழந்தனர், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் தேவைப்படுவதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த எச்சங்கள் கடந்த காலத்தில் காணாமல் போன ஜே.வி.பி. உறுப்பினர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான, முழுமையான விசாரணையை மேற்கொண்டு உண்மையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்