முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மியான்மாரின் இணையக் குற்றங்களில் தொடர்ந்தும் இணைக்கப்படும் இலங்கையர்கள்..!

Courtesy: Sivaa Mayuri

மியான்மாரில் (Myanmar) உள்ள இணையக் குற்ற முகாம்களுக்கு தொடர்ந்தும் இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாட்டவர்கள், குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பவர்கள், அதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள், அதிக சம்பளம் தரும் தொழில்கள் தொடர்பில் பொய்யாக வாக்களிக்கும் மனித கடத்தல்காரர்களால் குறிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் துபாய் போன்ற இடங்களுக்கு நேர்காணலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதன் பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு மியான்மாரில் சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற நடவடிக்கைகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

மியான்மாரின் இணையக் குற்றங்களில் தொடர்ந்தும் இணைக்கப்படும் இலங்கையர்கள்..! | Sri Lankans Continue Linked Myanmar S Cybercrimes

இந்த சைபர் கிரைம் முகாம்களில் உள்ளவர்கள், மன மற்றும் கொடூரமான உடல் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சுற்றுலா விசாவில் வெளிநாட்டு தொழில்களை தவிர்க்குமாறும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்

இதற்கிடையில் இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
0112102570 மற்றும் 076 844 7700 என்ற இலக்கங்களே பணிக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், [email protected] என்ற மின்னஞ்சலும் பணிக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரின் இணையக் குற்றங்களில் தொடர்ந்தும் இணைக்கப்படும் இலங்கையர்கள்..! | Sri Lankans Continue Linked Myanmar S Cybercrimes

இந்தநிலையில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் கடுமையான இரகசியத்தன்மையுடன் கையாளப்படும் என்று தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு உறுதியளித்துள்ளது 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.