முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை

மன்னார்(Mannar) – நானாட்டான் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவது
தொடர்பாக வடக்கு ஆளுநர் நா.வேதநாயகனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று(12.11.2024) நானாட்டான் கால்நடை
வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர் குறித்த மனுவை கையளித்துள்ளனர்.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – நானாட்டான் பகுதியில் கால்நடை
வளர்ப்போர்கான மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட்டுள்ள போதும் அந்த இடங்கள் இன்னும்
கையளிக்கப்படாமல் உள்ள நிலை தொடர்பில் அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேய்ச்சல் தரை

 இந்த விடயம் தொடர்பில் நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின்
தலைவர் கே.எம்.நிஹால் கருத்துத் தெரிவிக்கையில்,

“2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள். இவற்றுக்குரிய மேய்ச்சல் தரை காணி
ஒதுக்கப்பட்டுள்ளபோதும் அவை எங்களிடம் கையளிக்கப்படவில்லை.

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை | Ongoing Crisis In The Nanatan Grazing Land Issue

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைச் சிலர் சட்டவிரோதமாகக்
காடழிப்பு செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதில் ஒரு சில
அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை | Ongoing Crisis In The Nanatan Grazing Land Issue

எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் மனு ஒன்றை
கையளித்துள்ளோம். என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்