கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA)போதைப்பொருளை உடலுக்குள் மறைத்துக் கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியரா லியோன் (Sierra Leone) நாட்டை சேர்ந்த பயணி ஒருவரே விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதுடைய சந்தேக நபர் துருக்கி எயார்லைன்ஸ் (Turkish Airlines) விமானமான TK 730 இல் நேற்று (12) காலை இஸ்தான்புல் (İstanbul) ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
ஸ்கேனர் மூலம் பயணியை சோதனை செய்த அதிகாரிகள், அவரது உடலில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்து கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் 17 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தனது வயிற்றில் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகள் இருப்பதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில் காண்க…
https://www.youtube.com/embed/nnY9m37MB0c