முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக இன்று வரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் காவல்துறைக்கு நேற்றையதினம் (13.11.2024) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வேட்பாளர்களின் சின்னம்
அதனை அகற்றுமாறு
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல்
கண்காணிப்பாளர்களால் காவல்துறைக்கும் தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல்
இருந்தது.
இந்நிலையில், இன்றையதினம் காலை மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல்
கண்காணிப்பாளர்களால் காவல்துறை மற்றும் தேர்தல் திணைக்களத்திற்கு தகவல்
வழங்கப்பட்டிருந்ததன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினரால்
குறித்த அடையாளங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.
https://www.youtube.com/embed/9e-lu3EcVxU