முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எத்தனோல் உற்பத்திக்காக அதிகளவான சோளம் பயன்படுத்தப்படுவதால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வருடத்திற்கு 50 மெற்றிக் தொன் சோளம், எத்தனோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் கோழி தீவன உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் சோள உற்பத்தி

இலங்கையின் மக்காச்சோளத் தேவை வருடத்திற்கு 600,000 மெற்றிக் தொன் எனவும், ஆனால் மூன்று மெட்ரிக் தொன்களுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்வதாகவும் எஞ்சிய தேவையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Egg And Chicken Prices Rise

இந்நாட்டு மக்களின் புரதத் தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் வகையில், அந்த தொழிற்சாலைகளுக்கு போதியளவு சோளத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என்றார்.

எத்தனோல் உற்பத்தி

எத்தனோல் உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளத்தை நிறுவனங்கள் இறக்குமதி செய்தாலோ அல்லது வேறு முறையைப் பின்பற்றினாலோ கோழித் தீவன உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் அளவை உள்ளூர் சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Egg And Chicken Prices Rise

புதிய அரசாங்கம் கோழிப்பண்ணை தொழிலை மேம்படுத்துவதற்கு போதியளவு மக்காச்சோள இருப்புக்களை வழங்குவதற்கு அல்லது இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்காச்சோளம் இல்லாததால் கோழிப்பண்ணைத் தொழிலுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விரைவான தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.