நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் தலைவர் பிள்ளையான் வெற்றி பெறுவதற்கு கடுமையான சவாலை எதிர்கொண்டுவருவதாகத் தெரியவருகின்றது.
மட்டக்களப்பு வான்கெண்ணும் நிலையத் தகவல்களின்படி, தமிழரசுக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று முன்னணி வகித்து வருவதாகவும், 3 ஆசனங்களைப் பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது
அதேவேளை, ஆசனத்தைப் பெறுவதற்கான வாக்குகளைப் பெறுவதில் பிள்ளையான் பின்னணியில் நிற்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, ஈஸ்டர்குண்டுத்தாக்குதல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக பிள்ளையான் கைதுசெய்யப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை பிள்ளையான் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.