பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியையும் பகிர்ந்துள்ளது.
வரலாறு காணாத வெற்றி
மேலும், அண்டை ஜனநாயக நாடாக, தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆணைக்காக வாழ்த்துகிறதாகவும் இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HC @santjha called on President & Leader of NPP @anuradisanayake to congratulate on NPP’s victory in 🇱🇰 #ParliamentaryElections2024. As a fellow democracy,🇮🇳 welcomes the mandate & remains committed to further strengthening bilateral ties for the benefit of our peoples. pic.twitter.com/1qMEBn3uSO
— India in Sri Lanka (@IndiainSL) November 15, 2024
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களையும் தேசிய பட்டியல் ஊடாக 18 பெற்று வரலாறு காணாத வெற்றியை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.