முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் – அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்

புதிய இணைப்பு

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன்,
இரா.சாணக்கியன்.

மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.
சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் வைத்தியர்
ப.சத்தியலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் - அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம் | Who Will Get The Itak National List Seat Decision

இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில்
கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான
முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் - அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம் | Who Will Get The Itak National List Seat Decision

இந்த அரசியல்குழுக் கூட்டம் இன்று (17) காலை பத்து மணிக்கு வவுனியாவில் (Vavuniya) உள்ள அக்கட்சியின் மாவட்டக்கிளை காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் தேசியப் பட்டியலில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் - அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம் | Who Will Get The Itak National List Seat Decision

ஆசன ஒதுக்கீடு

குறித்த ஆசனத்தினை இம்முறை யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் - அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம் | Who Will Get The Itak National List Seat Decision

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே தமிழரசுக்கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தமையாலும், தேசிய மக்கள் சக்தி அங்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையாலும் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்பது அந்த உறுப்பிர்களின் கருத்தாகவுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதும் சுமந்திரன் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் - அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம் | Who Will Get The Itak National List Seat Decision

மேலும், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்