புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
இதன்போதே பிமல் ரத்நாயக்க சபைத் தலைவராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.