அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை
எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
அந்தத் தேர்தலில் தேசிய மக்கள்சக்தி யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்
பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே
தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வரலாற்றில் முதல் தடவை
அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.
வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர – சகோரிகளின் வாழ்க்கை முறை
எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த
வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது
இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி
வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு
யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில்
எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.
அதாவது பன்மைத்துவத்தில்
ஒற்றுமை என்று இருந்தது.
உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே
பிரதிபலித்துள்ளது.
தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள
ஒன்றாகவே கருதுகின்றேன்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
எனக்குத் தெரிந்த வரைக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் (University of Jaffna) சீனாசார்
பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றே
வருகின்றன.
நான் அறிந்த வரையில் சீன புலமையாளர் யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ்.
பல்கலைக்கழகப் புலமையாளர்கள் சீனப் பல்கலைக்கழகத்திலும் தங்களுடைய கற்கை
நெறிகளைக் கற்று வருகின்றார்கள்.
எனக்கு குழப்பகரமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது என்னவெனில் என்னுடைய சக
உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனப்
பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு விரும்புகின்றதால்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது அவர்களால் உரிய
முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில்லை என்பது குழப்பகரமான உணர்வைத் தருகின்றது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை
எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன்.
அந்தத் தேர்தலில் தேசிய மக்கள்
சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்
பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே
தோன்றுகின்றது.
இதனூடாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும்
ஏற்பட்டு ஒளிமயமான எதிர்காலம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கான ஒரு குறியீடாகவே
நான் இதனைப் பார்க்கின்றேன் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.