நானுஓயா பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் – அத்துமீறல் தடுப்புப் பணியகம் , உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (20) நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பணியகம் திறந்து வைப்பு
இதன்போது, பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு குறித்த மகளிர் மற்றும் சிறுவர் அத்துமீறல் தடுப்புப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.