மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள
திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் மட்டக்களப்பு
மாவட்டத்தின் தேவைப்பாடுகள் உட்பட அனைத்து விடயங்களும் அடங்கிய ஐந்து ஆண்டு
திட்டம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தொடக்கம் 2029வரையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண
நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இந்த
நிகழ்வு நடைபெற்றது.
நிபுணர்களின் ஆலோசனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களின்
ஆலோசனையின் கீழ் யுஎன்டிபி.யினி; நிதியுதவுதவியுடன் இந்த ஐந்து வருட திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது.
ஐந்து திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த ஐந்துவருட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயம்,கால்நடை, கடற்றொழில் உட்பட உற்பத்தி துறை சார்ந்த திட்டங்கள்
உள்ளடக்கியதாகவும் நீர்பாசனம்,வீதி புனரமைப்பு உட்பட பல விடயங்களை
உள்ளடக்கியதாக உட்கட்டுமான திட்டங்கள,சேவைதுறைகள் உட்பட பல்வேறு துறைகளின்
பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக பல்வேறு
விடயங்கள் இந்த ஐந்தாண்டு திட்ட நூலில் உள்வாங்கப்பட்டுள்ளது.