மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்றைய தினம் (22.11.2024) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக 4 அல்லது 5 வாரங்கள் செலவிடப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம்
முன்னதாக, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவுகளை இந்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (21.11.2024) நடைபெறதுடன், குறித்த கலந்துறையாடலில் மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.