சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (22) பிற்பகல் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மூன்றாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளை (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கைகளை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உட்பட இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிக்கை
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.