இலங்கையுடன் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்(IMF) பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பு இலங்கை மத்திய வங்கியில்(CBSL) இன்று முற்பகல்(23.11.2024) இடம்பெற்றது.
இதில் கருத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர்(Peter Breuer) இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மீளாய்வு
இதன்படி, மூன்றாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்படுமாயின் இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப் பெறும்.
குறித்த கடனுதவி வழங்கப்பட்டால், நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற கடன் தொகையின் அளவு ஆயிரத்து 333 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும்.
மேலும், “நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்க விளைவுகளை அளித்துள்ளன.
ஜூன் மாத இறுதி
ஜூன் மாத இறுதியில் ஆண்டுக்கு ஆண்டு இடையிலான பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சகல துறைகளிலும் குறிகாட்டிகள் உயர் நிலையில் பதிவாகியுள்ளன.
அத்துடன் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
கணிசமான நிதி சீர்திருத்தங்களை அடுத்து பொது நிதிகள் வலுப் பெற்றுள்ளன.
ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கான காலாண்டு செயற்திறன் இலக்குகள் வலுவான நிலையில் இருந்தன.
அதேநேரம் ஒக்டோபர் மாதத்தில் அநேகமான கட்டமைப்பு இலக்குகள் தாமதமாகவேனும் நடைமுறையாகியுள்ளன.
7 -2 தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக சில கட்டமைப்பு இலக்குகள் தாமதமடைந்தது.’’ என்றார்.