பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரிய E-8 வீசாக்கு அனுமதி கோரி சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பணியகத்திற்கு முன்பாக போராட்டம் தொடர் சத்தியாக்கிரகமாக மாறியுள்ளது.
தற்காலிக கூடாரம்
பணியகத்தின் முன்னிலையிலுள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரம் ஒன்றை மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.

பொலிஸார் அங்கு வந்து அவற்றினை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

