தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவிற்கு சி.வி விக்கிணேஸ்வரனின் (C. V. Vigneswaran) மதுபானசாலை அனுமதிப்பத்திரம் விவகாரம் தான் மிகப்பெரிய காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் (Partheeban) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (23) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்றும் இல்லாத வகையில் எல்லாக்கட்சிகளையும் விட நாங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியமைக்கான காரணம் சி.வி விக்கிணேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் விவகாரம்தான்.
மிகப்பெரிய வெற்றி
உண்மையை வெளியில் சொல்லத்தான் வேண்டும், அத்தோடு
இதனை நான் அவரிடமும் நேரடியாக தெரிவித்து இருக்கின்றேன்.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் இருந்து இருந்தால் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
அத்தோடு, என்றும் நான் அந்த கட்சியில் இருந்து பிரியவில்லை, அந்த கட்சியை சாந்தவர்கள்தான் என்னை கட்சியை விட்டு விலக்கி வைத்தனர்.
அருவறுப்பான அரசியல்
தமிழ் மக்கள் அருவறுப்பான அரசியல் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணம் தமிழ் தேசிய மக்கள் முண்ணனிதான்.
அடுத்த கட்சிக்களை விமர்சித்து விமர்சித்து தற்போது தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனத்தை வென்று விட்டனர்.
இந்தநிலையில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் அரசியல் என்று வரும் போது தனித்த அல்லாது கூட்டாக செயற்படுவதுதான் எமது நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.