கடந்த இருபதாம் திகதி விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி
நேற்றையதினம்(23) யாழ்ப்பாணம் (jaffna)போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கற்குவாரி,
மாங்குளம்(mangulam) பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் யுவான்கீர்த்தி (வயது 36) என்ற ஒரு
பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி சந்தையில் மரக்கறி வாங்கிக்கொண்டு
மல்லாவியிலிருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தார்.
இதன்போது வன்னிவிளாங்குளத்தடியில் எதிரே மிகவும் வேகமாக
இருவருடன் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தினை முந்த முற்பட்டபோது இவர் மீது
மோதியது.
இதன்போது மூவரும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்ட நிலையில் அன்றையதினமே, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த
இருவரும் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
அதன்பின்னர் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,
அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில்
சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கு கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.