முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வானது தண்ணீரூற்று பரி.மத்தியா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை, கூழாமுறிப்பு, சிலாவத்தை பிரதேசத்திற்குட்பட்ட
மாவீரர்களின் பெற்றோர்களே நேற்று (25.11.2024) இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல்
நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின்
தலைவர் தீபனால் (முன்னாள் போராளி) பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் மலர் அஞ்சலி
இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வின்
இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான
நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான
மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.



