முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான இரண்டு நாள் விவாதம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதத்தை நடாத்தவும் அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (25) நடைபெற்றது.

பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 

இதன்போது டிசம்பர் 3ஆம் திகதி முதல் நாடாளுமன்ற வாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் : வெளியான அறிவிப்பு | Discussion On President Anura S Policy Statement

கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதே அந்த இரண்டு நாட்களின் முக்கிய நோக்கமாகும் என கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான பிரேரணையை விவாதித்து நாடாளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்

அந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஊடாக, 2025 ஏப்ரல் 30ஆம் திகதி வரை அரசாங்கத்தின் அலுவல்களை நடத்த தேவையான நிதி அதன் மூலம் ஒதுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் : வெளியான அறிவிப்பு | Discussion On President Anura S Policy Statement

இதேவேளை இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்வதை எதிர்பார்க்கவில்லை என கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்