ஈழத்தமிழினத்தில் மாவீரர் நாள் (Maaveerar Naal) என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.
அத்தகைய மாவீரர்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது.
குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.
இந்தவகையில், மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் உணர்வுபூர்வமாக நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் கீழ் உள்ள இணைப்புகளில் பார்வையிடலாம்.