முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது!

காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

26 திகதி பாடசாலை முடிந்து வீடுகளுக்கு செல்ல பேருந்து இல்லாததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை , உழவு இயந்திரத்தில் செல்லுமாறு பாடசாலையின் அதிபர் தான் பணம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது! | Ampara Tractor Accident 4 People Arrested

எனினும், வெள்ளப்பெருக்கு காரணமாகவே பேருந்து இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் தெரிவித்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து சம்பவம்

அத்தோடு, குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமையும் மேலும் தெரியவந்துள்ளது.

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது! | Ampara Tractor Accident 4 People Arrested

இந்த நிலையில், 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மற்றும் இயந்திரத்தின் சாரதியும் உதவியாளரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்