முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீண்ட காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வுகோரும் புளியங்குள மக்கள்

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு புளியங்குளத்தில் உள்ள மக்கள் நீண்ட காலமாக பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

மிகக்கடுமையான வெள்ள நீரோட்டத்தினால் அவர்கள் இந்நிலைமைக்கு உள்ளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.பொருத்தமற்ற வீதி புனரமைப்பே தமக்கு இந்நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் புளியங்குளத்தின் பிரதான வீதியோரமாக உள்ள பல குடும்பங்கள் பாரியளவிலான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இது போன்ற நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்ந்தவாறே இருப்பதாகவும் இதுவரை இவ் நெருக்கடி நிலைக்கு உரிய தீர்வுகள் எவையும் பெற்றுத் தரப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

மூடப்படும் விளைநிலங்கள் 

அதிகமாக வரும் வெள்ள நீர் விரைவாக வடிந்தோடாது இருப்பதால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன.

வெள்ளம் வடிந்தோடும் வரை நீர் வரத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் போது வெள்ள மட்டம் மேலும் உயர்ந்து செல்வது அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீண்ட காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வுகோரும் புளியங்குள மக்கள் | A Solution To A Long Standing Crisis

வயல் நிலங்கள் நீரில் மூழ்குவதோடு வாழை உள்ளிட்ட வீட்டுத்தோட்ட பயிர் நிலங்களும் நீரில் மூழ்கிவிடுகின்றன.

மாட்டுத் தொழுவத்திற்குள்ளும் நீர் புகுந்து விடுவதால் மாடுகளை பராமரிப்பதும் கடினமான ஒன்றாக மாறிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்குள் புகும் வெள்ளம் 

மெதுவாக வழிந்தோடும் வெள்ளத்தினால் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதையும் இந்த நிலையினால் நீர் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

நீண்ட காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வுகோரும் புளியங்குள மக்கள் | A Solution To A Long Standing Crisis

ஒவ்வொரு மாரி காலத்திலும் இந்த அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் வெள்ளம் புகுந்த வீட்டு உரிமையாளர் குறிப்பிடுகின்றனர்.

வெள்ள நீர் மட்டம் படிப்படியாக உயரும் போது வீட்டில் உள்ளவர்களை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி விடுவதாகவும் பகல் பொழுது வரை வீதியில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வீட்டில் உள்ள பொருட்களை உயரமான இடத்தில் எடுத்து வைக்க வேண்டும்.அல்லது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவருடைய உரையாடலின் போது அவர் மேலும் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வாறு வெள்ளத்தால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டவாறே இருப்பதாக கூறப்படுகிறது.

வீதி புனரமைப்பினால் ஏற்பட்ட நிலை 

2009 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வீதியபிவிருத்தியின் போது இந்த பிரதான வீதியும் அபிவிருக்குள்ளானது.

வீதியின் உயரம் முன்னர் இருந்ததையும் விட பல மடங்கு உயரமாக இருக்கும் படி அமைக்கப்பட்டதோடு பாலத்தின் அமைப்பில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது இருப்பதையும் அவதானிக்கலாம்.

நீண்ட காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வுகோரும் புளியங்குள மக்கள் | A Solution To A Long Standing Crisis

முன்னர் மாரிகால மழையினால் ஏற்படும் வெள்ளம் உயரம் குறைந்த பாதையை மேவியும் பாலத்தின் ஊடாகவும் விரைவாக பாய்ந்தோடி வடிந்து விடும் சூழல் இருந்தது.

எனினும் இப்போது வீதியை மேவி வெள்ள நீர் பாய்ந்து செல்ல முடியாத ஒரு நிலைஏற்பட்டுள்ளது.பாலத்தினூடாகவே முழு வெள்ள நீரும் பாய்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் அகலம் குறைவாகவும் பாலங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் இவ்வாறு நிகழ்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையினால் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கொண்டு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தி சில நாட்களை விழுங்கி விடுகின்றன.

பெறக்கூடிய தீர்வு 

வீதி புனரமைப்பின் போது பொறியியலாளர்களிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டி “பாலத்தின் அகலம் போதாது. இந்த அகலத்தில் இருந்தால் வெள்ளம் வடிந்த ஓட கடினமாவதோடு குறுகிய நேரத்தில் அதன் உயரமும் அதிகரித்து விடும் எனவும் வலியுறுத்தியிருந்ததாக முதியவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.

எனினும் முதியவர்களின் கருத்துக்களுக்கு அவர்கள் செவிசாய்த்திருக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

நீண்ட காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வுகோரும் புளியங்குள மக்கள் | A Solution To A Long Standing Crisis

A34 வீதியில் 26/4,26/5,27/1,27/2 என பெயரிடப்பட்ட பாலங்களின் அருகில் உள்ள பொதுமக்களே மேற்குறித்த அசௌகரியங்களை ஒவ்வொரு ஆண்டும் மாரி காலத்தில் எதிர்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான சிறந்த தீர்வாக 26/5,27/1 பாலங்களுக்கிடையில் புதியதொரு பாலத்தினை நீளம் கூடியதாக; அதிக வெள்ள நீரை வெறியேற்றக் கூடியதாக உள்ள பாலத்தினை அமைத்துக் கொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும் என இது தொடர்பில் துறைசார் நிபுணர்கள் சிலருடன் மேற்கொண்ட கேட்டல்களின் போது அவர்கள் குறிப்பிட்டிருந்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுக்கும் போது எதிர்காலத்தில் இம் மக்களினது அசௌகரியங்களை தீர்த்து சுமுகமான ஒரு வாழ்வை அவர்கள் பெற வழியேற்படுத்த முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.