முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை – குகதாசன் எம்.பி விஜயம்

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நேரில் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் (Shanmugam Kugathasan) பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட கள்ளம்பற்றை திரியாய், குச்சவெளி, பெரியகுளம், பாலம்
போட்டாரு, பத்தினி புரம், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் தற்காலிக முகாம்களை பார்வையிட்டு அங்கிருக்கும்
தேவைகளை கேட்டறிந்து நிவாரணப் பணிகளை அவர் துரிதப்படுத்தினார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல்
முகாம்களில் தங்கி வருகின்றனர். 

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான
நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு
மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு
வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்இ நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

முதலாம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்
வியாழக்கிழமை (28) வரை 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15000
க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும் திருகோணமலை
மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல்
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

சமைத்த உணவு

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம்.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடலுக்குச் சென்ற உயிரிழந்த சம்பவம்
ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும்
மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலக ஊழியர்கள், முப்படையினர், சுகாதாரப்
பிரிவினர் மற்றும் சமய சமூக அமைப்புக்கள் என அனைவரும் 24 மணி நேரமும் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மகாவெலி ஆற்றின்
பெருக்கெடுப்பால், கூடிய கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை ஆயத்து நிலைகளை
தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

மேலும் வெள்ள நீர் தேங்க நிற்கின்ற இடங்களில் இருந்து நீரை கடலுக்குள்
வெளியேற்றுவதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம் என்றும்
தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை - குகதாசன் எம்.பி விஜயம் | Bad Weather And Flood In Trincomalee

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்