முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்விப்பணியில் பொன்விழா காணும் யாழ். பல்கலை: பிரித்தானியாவில் சிறப்பு நிகழ்வுகள்

சமூகத்திற்கான கல்விப்பணியில் தனது 50ஆவது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழாவானது இலங்கை மாத்திரமல்லாது சர்வதேச நாடுகளிலும், கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் (30.11.2024) லங்காசிறி, IBC தமிழ் ஆகிய எமது ஊடக குழுமத்தின் அனுசரணையில் லண்டன் நகரில் அமைந்துள்ள பாத் வீதி, ஸ்லோஃப்பில் உள்ள நியூ கிறிஸ்டல் விருந்து மண்டபத்தில்(At the New Crystal Ballroom on Bath Road, Slough, London), பிரித்தானிய நேரப்படி மாலை 5 மணிக்கு 50ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த தருணத்தை கொண்டாடும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகம் எங்கும் பரந்து வாழும் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மிகவும் சிறப்பான முறையில் பொன்விழா கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறனர்.

நேரடியாக ஒளிபரப்பு

இதற்கமைய கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து பிரித்தானியாவின் லண்டனிலும் பொன்விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வந்தன.

கல்விப்பணியில் பொன்விழா காணும் யாழ். பல்கலை: பிரித்தானியாவில் சிறப்பு நிகழ்வுகள் | Jaffna University Golden Jubilee Event Held In Uk

அந்த வகையில் இன்று இடம்பெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளில் கலந்துக் கொள்வோருக்கான வாகனத் தரிப்பிட வசதிகளுடன் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டுக்கோப்புடன் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் லண்டனுக்கு நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள பழைய மாணவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகளுக்காக பொன்விழா நிகழ்வானது லங்காசிறி, IBC தமிழ் ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதன்படி, கீழே உள்ள இந்த இணைப்பை சொடக்குவதன்(By clicking on this link below) மூலம் நிகழ்வுகளை எமது வாசகர்கள் நேரடியாக கண்டு மகிழலாம்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.