முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெற்ற வாகன விபத்து: பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்(Jaffna) – சுதுமலைமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியில் நேற்றையதினம் (30.11.2024) இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய அன்னலிங்கம் செந்தில்குமரேசன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “நேற்று(30) இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார்
வண்டியில் வரும் போது எதிரே வந்த கார் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின்
பின்னரே நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற வாகன விபத்து: பிறப்பு - இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழப்பு | Jaffna Vehicle Accident One Died

இதன்போது, விபத்தில்  படுகாயமடைந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அவரை
காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டதுடன்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய்  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்