கிளிநொச்சி (Kilinochchi) – பளை பகுதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியானது அப்பகுதியில் உள்ள மக்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யும் இடமாக காணப்படுகிறது.
குறித்த சந்தை தொகுதியில் பல வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்களுடைய அன்றாட வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் எமது ஐபிசி தமிழ் குழுவினர் தாயகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை மட்டுமன்றி உள்ளூர் உற்பத்திகளுக்கான காலமாக காணப்படும் சந்தை தொகுதிகளை நோக்கி பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்..
இதன் ஒரு பகுதியாகவே எமது குழுவினர் கிளிநொச்சி மண்ணை நோக்கி தங்களுடைய பயணத்தை தொடர்ந்திருந்தார்.
இந்த கள விஜயத்தின் போது அந்த பகுதியில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பதிவு செய்ய அவர்கள் மறக்கவில்லை.
இந்த பகுதி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அரசிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் ஆகியவற்றை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் “ஊர் வாசனை” நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/Srm5RlyNFjc