முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயணிகளை ஏமாற்றி அலைக்கழிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் – வெளியாகிய ஆதங்கம்

இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர்,
பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர்
குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த டிசம்பர் 1ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் வவுனியா பிரதான பேருந்து
நிலையத்தில், BN – NB – 9185 என்ற இலக்க அரச பேருந்து ஒன்று தரித்திருந்தது.

நான் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் அவர்களிடம் வினவிய வேளை அந்த
பேருந்து யாழ்ப்பாணம் செல்லும் என கூறி, என்னை பேருந்தில் ஏறுமாறு
கூறினார்கள்.

யாழ்ப்பாணம் செல்லாது

நான் பணத்தினை கொடுத்து பற்றுச் சீட்டினை
பெற்றுக் கொண்டேன்.

பயணிகளை ஏமாற்றி அலைக்கழிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் - வெளியாகிய ஆதங்கம் | Sltb Is Deceiving And Misleading Passengers

பேருந்தில் ஏறி அமர்ந்த வேளை, தொடர் பிரயாணம் காரணமாக நான் கண்ணயர்ந்து
விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்தவேளை பேருந்து கிளிநொச்சியை
வந்தடைந்து. என்னை கிளிநொச்சியில் இறங்குமாறு கூறினார்கள்.

நான்
யாழ்ப்பாணத்திற்கு தானே பற்றுச்சீட்டு பெற்றுள்ளேன். ஆகையால் என்னை
யாழ்ப்பாணத்தில் தானே இறக்க வேண்டும் எனக்கூறினேன்.

அதற்கு அவர்கள் இந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது. பின்னால் வருகின்ற
பேருந்தில் சொல்லி இருக்கின்றோம். அதில் ஏறுங்கள் அவர்கள் உங்களை
யாழ்ப்பாணத்தில் இறங்குவார்கள். இந்த பற்றுச்சீட்டை பயன்படுத்தி செல்லலாம் என
எனக்கு கூறினர்.

அந்த பேருந்து கிளிநொச்சி டிப்போவிற்கு சொந்தமானது
என்றபடியால் டிப்போவிற்கு சென்றது.

766 ரூபா

நானும் இறங்கி வீதியில் நின்றவேளை சிறிது நேரம் கழித்து கண்டி பேருந்து ஒன்று
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

பயணிகளை ஏமாற்றி அலைக்கழிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் - வெளியாகிய ஆதங்கம் | Sltb Is Deceiving And Misleading Passengers

நானும் அந்த பேருந்தில் ஏறிவிட்டு,
முன்னர் எடுத்த பற்றுச்சீட்டினை காண்பித்தேன். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள்
பற்றுச்சீட்டு பெறவேண்டும் என்று கூறினர்.

நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த
பின்னர் மீண்டும் 260 ரூபா செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தேன். மொத்தமாக 766 ரூபாவை இந்த பயணத்திற்காக
செவழித்தேன்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.