முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் – மறுக்கும் ரில்வின் சில்வா

புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒரு போதும்
கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் (Sri Lanka) நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும் புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கு சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

13ஆவது அரசமைப்பு திருத்தம்

சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
 இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு
மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள்

மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது.

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக் கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய
மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது.

புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13வது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது.” என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மக்களின் சிக்கல்

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரில்வின் சில்வா வடக்கு மக்களின் சிக்கல்களைத்
தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. 

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களை தீர்த்து வைக்க மிகவும் நடைமுறைச் சாத்தியமானது சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. 

அத்தகைய மிகச் சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை களையும் ஒழிக்கப்போவ
தில்லை என்றே நான் கூறினேன். 

மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். 

அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும். எனது செய்தி திரிபுபடுத்தப்பட்டுள்ளது என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.