முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் (Harini Amarasuriya) இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் (06) நடைபெறவுள்ளது.

இன்று காலை 09.30 முதல் மாலை 05.30 நடைபெறவுள்ள அமர்வில் அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (2025 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்) மற்றும் 12 குறை நிரப்பு மதிப்பீடுகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை

அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இந்த இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்படவுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று | Interim Accounts Report To Be Presented Parliament

இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட பிரேரணை

இதேவேளை, அண்மைய அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் நேற்று (04) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று | Interim Accounts Report To Be Presented Parliament

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனினால் (Rishad Bathiudeen) முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இது தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிக்க முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான சபை ஒழுங்குப் பத்திரம் 

https://www.youtube.com/embed/kD6Zaf5E5dM

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.