முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் தேவை: சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டல்

Courtesy: uky(ஊகி)

கிராமிய வீதிகளில் ஏற்பட்டு வரும் சேதங்களை இழிவளவாக்குவது தொடர்பில் நடவடிக்கைகள் தேவை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் பல கிராமங்களில் உள்ள வீதிகள் பாரியளவிலான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

இதனால் மக்கள் அதிக பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் தாக்குதல் அவர்கள் குறிப்பிட்டு இந்த சுட்டிக்காட்டலை மேற்கொண்டிருந்தனர்.

வீதியபிவிருத்தி திட்டங்கள் ஊடாக வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஆயினும் அவ்வாறு புனரமைக்கப்படுமளவுக்கு அவை தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை.

இந்த விடயம் சார்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல சமூக அமைப்புக்களின் மீதும் தங்கள் சாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

வெள்ளத்தால் அரிக்கப்படும் வீதிகள்

கிராமங்களில் உள்ள பல வீதிகள் வெள்ள நீரால் அரிக்கப்பட்டு பயன்படுத்திக்கொள்ள முடியாது போகின்றன.

வீதியின் மேல் வெள்ளம் பாய்ந்து செல்வதால் அவை அரிக்கப்பட்டு குழிகள் தோன்றுவதோடு வீதிக்கு போடப்பட்டிருக்கும் கிரவல் மண்ணும் அகற்றப்படுகின்றது.

கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் தேவை: சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டல் | Road Issues In Northen Province Areas

சில வீதிகளில் கிரவல் அரிக்கப்பட்ட இடங்களில் மணல் சேர்வதையும் அவதானிக்கலாம்.ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த அவலநிலை ஏற்பட்டவாறே இருக்கின்றது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

கிழக்கு முல்லைத்தீவின் பல கிராமங்களில் மழைக்கால வெள்ளத்தினால் கிராமங்களில் உள்ள வீதிகள் மண்ணரிப்புக்கு உள்ளாகி பாரிய குழிகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு முறிப்பு கிராமத்தில் இவ்வாண்டு வெள்ள நீரினால் அரிக்கப்பட்டு குழிகளாகிய வீதியின் தோற்றத்தை செய்தியுடன் இணைக்கப்பட்ட படங்களில் காணலாம்.

இந்த வீதியின் மற்றொரு பகுதியில் இதுபோன்ற பாரிய குழிகள் கடந்தாண்டு மழைக்கால வெள்ளத்தினால் ஏற்பட்டிருந்தது.எனினும் இதுவரை அந்த பாதை செப்பனிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராமிய வீதிகளின் தன்மை 

கிரவல் இடப்பட்ட வீதிகள்,தார் இடப்பட்ட வீதிகள், கொங்ரீட் இடப்பட்ட வீதிகள், காபைட் இடப்பட்ட வீதிகள் என கிராமிய வீதிகளில் பல்வகைத்தன்மையினை அவதானிப்புக்கள் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்கள் மூலம் அறியலாம்.

ஆயினும் அத்தனை வீதிகளிலும் வெள்ள நீரால் வீதிகள் சேதமடைதல் மட்டும் பொதுவான இயல்பாக இருக்கின்றது.

அநேகமான கிராமிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள குறுக்கு மதகுகள் பயன்பாடற்ற முறையில் இருக்கின்றன.

கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் தேவை: சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டல் | Road Issues In Northen Province Areas

மதகுகள் ஊடாக நீர் பாய்ந்தோடுவதை அவதானிக்க முடியவில்லை.மதகுகளை கடந்த மற்றொரு இடத்தில் வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து செல்வதை அவதானிக்கலாம்.

இதனை வீதியைமைப்பில் ஏற்பட்டுள்ள தவறாகவே கருத வேண்டும்.இந்த இயல்பு வீதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு ஒரு காரணம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வீதிகளின் கட்டமைப்பு நேர்த்தியாக இருப்பதில்லை.மற்றும் தரமான உள்ளீடுகளைக் கொண்டு வீதிகள் அமைக்கப்படுவதில்லை எனவும் தங்கள் அதிருப்தியை கிராமிய வீதியமைப்புத் தொடர்பில் வெளிப்படுத்திய பொதுமக்களையும் இதன் போது சந்திக்க முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

சேதமடையும் வடிகால்கள் 

வீதிகளை அமைக்கும் போது வீதியின் ஓரமாக வடிகால்களை பொருத்தமான விதத்தில் அமைத்துக் கொடுக்காதது பல கிராமங்களில் உள்ள குறைபாடாக இருந்து வருகின்றது.

வீதிகளை அமைத்த பின்னர் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தகாரர்களே பராமரிக்க வேண்டும் என்ற வீதியமைப்பு உத்தரவாதம் கிராமிய வீதியமைப்பு ஒப்பந்தக்காரர்களிடம் இருப்பதில்லை.அல்லது அதற்கு முனுரிமை வழங்குவதில்லை என இது தொடர்பில் பரிச்சயமிக்க பொறியியலாளர் ஒருவருடன் உரையாடிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த இயல்புக்கு ஒப்பந்தங்களை வழங்கும் அரச அதிகாரிகளும் உதவியாக இருப்பதும் கிராமிய வீதிகளின் விரைவான சேதமடைதலுக்கு காரணமாக அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் தேவை: சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டல் | Road Issues In Northen Province Areas

அதிகமான கிராமிய வீதிகளில் உள்ள இயல்பான வடிகால்கள் மற்றும் அமைக்கப்பட்ட வடிகால்கள் ஒரு மழைக்காலம் கடந்த பொழுதுகளின் பின்னர் புற்களாலும் சிறு பற்றைகளாலும் நிறைந்து போயிருப்பதை அவதானிக்கலாம்.

இந்த நிலையினால் வடிகால்களினூடாக பாய்ந்து செல்லவேண்டிய வெள்ள நீர் வீதிக்கு வந்து அதன் மேலாக பாய்ந்து செல்கின்றது.

இவ்வாறான செயற்பாட்டை கிரவல் வீதிகளில் அதிகம் அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான ஒரு போக்கினாலேயே அவ்வீதிகள் அதிகம் சேதமடைகின்றன.

முல்லைத்தீவில் குமுழமுனை, முறிப்பு,செம்மலை, மாமூலை, புதரிக்குடா, இரணைப்பாலை,மூங்கிலாறு,
முத்தையன்கட்டு,தண்ணிமுறிப்பு, போன்ற பல கிராமங்களில் கிரவல் பாதைகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான கிரவல் இடப்பட்ட கிராமிய வீதிகளின் புனரமைக்கப்பட்டு காபைட் அல்லது தார் , கொங்கிரீட் பாதைகளாக மாற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வசதியான மதகுகள் இதுவரை இல்லை என்பது பாரிய குறைபாடாகவே கிராமிய வீதிகளில் இருந்து வருகின்றதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும் புனரமைப்பு 

மழைக்காலங்களில் சேதமாகும் வீதிகளை மீண்டும் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டிய இக்கட்டு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

சேதமடைதை இழிவளவாக்கும் முயற்சியோடு தொடர்ச்சியான வீதி பராமரிப்பு இருக்கும் போது இத்தகைய இக்கட்டை தவிர்த்துப் போகலாம் என்பது பொறுப்பு வாய்ந்த மனிதர்களது கருத்துக்களாக இது தொடர்பில் பெறப்பட்டு இருந்ததையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் தேவை: சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டல் | Road Issues In Northen Province Areas

குறுகிய காலத்திற்குள் பலதடவை வீதி மீளமைப்பு அல்லது மீள் செப்பனிடலுக்கு செலவிடும் நிதியானது வலுவான சிறந்த கிராமிய வீதிக் கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றை நிலையாக நீண்ட காலம் பயன்படுத்திக்கொள்ள செலவாகும் நிதியோடு ஒப்பிடும் போது பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை என துறைசார் நிபுணர்கள் தங்கள் ஒப்பீட்டு கருத்துக்களையும் பகிர்ந்திருந்தனர்.

பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் கிராமிய வீதிகளில் ஏற்படும் சேதங்களை இழிவளவாக்கி மக்களின் இலகுவான போக்குவரத்துக்கு துறைசார் அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக அமைவதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.