முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் டிப்போ காவலாளி கொலை! பல இலட்சம் ரூபா கொள்ளை

நுவரெலியா (Nuwara Eliya) – லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து விட்டு டிப்போவில் இருந்த ஒன்பது இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (05) இடம்பெற்ற குறித்த சம்பவம்
தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், டிப்போவில் காவலராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பல இலட்சம் ரூபா பணம் திருட்டு

பாதுகாப்பு அறையில் காத்திருந்த காவலாளியை சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்றுவிட்டு டிப்போவின் அலுமாரியில் இருந்த சுமார்
ஒன்பது இலட்சம் ரூபாவை எடுத்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுவரெலியாவில் டிப்போ காவலாளி கொலை! பல இலட்சம் ரூபா கொள்ளை | Depot Security Officer Murdered 9 Lakh Rs Theft

கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும்
டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில்
இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு
வரும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

நுவரெலியா லங்கம டிப்போவில் நேற்று (05) பிற்பகல் ஓடிய பேருந்துகளின் வருமானம்
வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்