2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பண வாக்கெடுப்பு, வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கப் பணிகளை தொடர்வதற்கும் கடன் செலுத்துவதற்குமான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு
அதன்படி இது தொடர்பில் நேற்றும் (06) நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றுள்ளது.
இதற்கமைய, நேற்றைய விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பின்றி நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.