நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers Congress) நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி
இதில் 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
முதலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் இந்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் பதிவு செய்யப்பட்டு அரசியலில் களமிறங்கிய முதலாவது கட்சி அத்துடன் முதலாவதாக நாட்டில் ஆட்சி அமைத்த கட்சி
இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.