முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வன்னியில் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்தோர் குறித்து வெளியான தகவல்

புதிய இணைப்பு

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்று வரை (09) 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை
சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் சில தரப்புக்கள்
பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம்
ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவு
அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கு இடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று
தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 14 அரசியல் கட்சிகள் மற்றும்
20 சுயேட்சை குழுக்களை சேர்ந்தவர்கள் உட்பட 338 பேர் தமது தேர்தல் செலவு
அறிக்கையை சமர்பித்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவுத்தபாலில் அனுப்பியுள்ளோர்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 25
சுயேட்சைக்குழுக்கள் என மொத்தமாக 48 தரப்புக்களை சேர்ந்த 432 பேரின்
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

வன்னியில் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்தோர் குறித்து வெளியான தகவல் | Income Expenditure Report Parliamentary Elections

அவர்களில் 5 சுயேட்சைக் குழுக்களினதும் 9 அரசியல் கட்சிகளையும் சேர்ந்த
14 தரப்புக்களின் செலவு அறிக்கை நேற்றுவரை கிடைக்கப்பெறவில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில தரப்புக்கள் பதிவுத்தபாலில் செலவு அறிக்கையை அனுப்பி வைத்துள்ள
நிலையில் அவை கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8361 வேட்பாளர்களிடமிருந்து மொத்தம் 7412 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுயேச்சை அரசியல் குழுக்களில் போட்டியிட்ட 690 வேட்பாளர்களிடமிருந்து 493 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

சமர்பிக்காத வேட்பாளர்கள்

அத்தோடு, 527 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில், 434 நபர்கள் மட்டுமே தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை கையளித்துள்ளனர்.

வன்னியில் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்தோர் குறித்து வெளியான தகவல் | Income Expenditure Report Parliamentary Elections

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட பணம் தொடர்பான அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.