முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்!

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி (Nawalapitiya) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்றையதினம் (10.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி,  ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை

40 – 45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி
நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி
மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்! | Body Unidentified Person Found In Mahaweli River

இதேவேளை, புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக
வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (09.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலம் தெரிய வருவதாவது, பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில்
சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணை

இதன்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக வீழ்ந்துள்ள
நிலையில் பின்னால் வருகைத் தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்! | Body Unidentified Person Found In Mahaweli River

இதன்போது குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே
உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23
வயதுடையவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை
நுரைச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.