யாழ்ப்பாணத்தில் (Jaffna) வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (13.12.2024) யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும்
அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
வேலையற்ற பட்டதாரிகள்
எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை
வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர்
கலந்துகொண்டனர்.